பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அந்தஸ்து

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அந்தஸ்து
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அந்தஸ்து

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அந்தஸ்து வழக்கும் மசோதா மக்களவையில் ஒரு மனதாக நிறைவேறியது. 

அரசமைப்புச் சட்டம் 123வது திருத்த மசோதா மீது சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த விவாதத்தில் 32 உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்க்களை முன்வைத்தனர். இந்த மசோதாவை வெற்றிகரமாக கொண்டு வந்ததற்காக சமூகநீதிக்கான அமைச்சர் தாவார்சந்த் கெலாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அரசமைப்பு சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கு தேவையான் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கெலாட், சமுதாயத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை மேம்படுத்துவதில் மோடி தலைமையிலான அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com