தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்ககோரும் வழக்குகள் - உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்!

தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்ககோரும் வழக்குகள் - உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்!
தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்ககோரும் வழக்குகள் - உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்!

தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டினரைத் தொடர்ந்து, நம் நாட்டிலும் தன்பாலின திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இதற்கான  அதிகாரப்பூர்வமான சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து,  தன்பாலின திருமணம் குற்றமில்லை.. என்று உச்ச நீதிமன்றம் 2018ம் ஆண்டு வெளியிட்ட அதிரடி அறிவிப்பினை தொடர்ந்து, தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்ந்து தங்களின் திருமணத்தை அங்கீகரிக்க உத்தரவு கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் இவ்வழக்கானது, உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. 

ஹைதராபாத்தைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் கடந்து பத்து ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தங்களது திருமணத்தை அங்கீகரிக்கவில்லை என்றும் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி மத்திய அரசு நான்கு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ,நாடு முழுவதும் மற்ற உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாகவும் அறிவித்தனர்.

இதனை அடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் இதே கோரிக்கை வலியுறுத்தி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வருவதால் இந்த வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com