பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்: இந்தியா பதிலடி

பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்: இந்தியா பதிலடி

பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்: இந்தியா பதிலடி
Published on

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை பதிலடி கொடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும், இந்திய நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித் திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில், அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் குழுக் கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்தியா உடனான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்தியாவுடனான தூதரக உறவை குறைத்துக் கொள்வது என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மறுசீராய்வு செய்வது எனவும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர் அஜய் பிசாரியாவை டெல்லிக்கு திருப்பி அனுப்பவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அதேபோல, இந்தியாவுக்கான தங்கள் நாட்டு தூதரை இங்கு அனுப்பப்போவதில்லை எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் இந்த முடிவுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதிலடி கொடுத்துள்ளது.

வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பாகிஸ்தானின் தன்னிச்சையான முடிவுகள் இருதரப்பு உறவைப் பாதிக்கும். இரு நாடுகளுக்கு இடையே வழக்கமான தூதரக உறவை பின்பற்ற வேண்டும். காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். காஷ்மீர் குறித்த முடிவுகள் பாகிஸ்தானுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதில் ஆச்சரி யமில்லை. இந்தியாவின் அதிகார வரம்பில் பாகிஸ்தான் தலையிட முற்படுவது ஒருபோதும் வெற்றி பெறாது’’ என்று தெரி வித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com