மின்சார சட்டத் திருத்த மசோதா: கடுமையாக எதிர்க்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சார சட்டத் திருத்த மசோதா: கடுமையாக எதிர்க்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சார சட்டத் திருத்த மசோதா: கடுமையாக எதிர்க்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சார சட்டத்திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்வதற்கு முன்பிருந்தே மின்சாரம் தனியார்மயமாக்கப்படும் என்ற அச்சத்தில் பலதரப்பட்ட எதிர்ப்புகள் எழுந்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் மின்சார சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது,

  • திமுக தலைவர், முதல்வர் இந்த மசோதாவை எதிர்த்து வருகிறார். இந்த மசோதா ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு மிகுந்த பாதிப்பை உருவாக்கும். 
  • நாடாளுமன்றத்தில் இதற்கு டி.ஆர்.பாலு கடுமையாக எதிப்பை தெரிவித்தார்.
  • அரசு கட்டமைப்பை தனியார் துறை பயன்படுத்த உள்ளது.
  • அதிகமான பயன்பாட்டு உள்ள இடங்களை தனியார் நிறுவனங்கள் கைப்பிடிக்க நினைக்கும்.
  • ஒழுங்குமுறை ஆணையம் தன்னை முழுமையாக பிரித்துக் கொள்ள நினைக்கிறது. மத்திய அரசின் ஒழுங்குமுறை ஆணையம் கீழ் அவர்கள் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்பதுபோல் உள்ளது.
  • 1 லட்சம் அபராதம் முதல் 1 கோடி ரூபாய் அபராதம் வரை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. 6 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டிய இடத்தில் 6 லட்சம் வரை செலுத்த வேண்டியது இருக்கும்.
  • விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திருத்த சட்ட மசோதைவை இல்லாமல் செய்யவதுபோல் உள்ளது.
  • மாநில அரசுக்கு உரிமை இல்லாத நிலை முற்றிலுமாக ஏற்படும். தனியார் நிறுவனங்கள் முழுக்க முழுக்க லாபம் பெறும் வைகையில் உள்ளது. ”என்றார்.

“அதிமுக., இப்போது போராட்டம் நடத்த வேண்டியதுதானே. இதற்கு எதிர்ப்பு சொல்ல வேண்டியதுதானே. ஏன் அமைதியாக இருக்கிறது.? மக்கள் மீது உண்மையில் அக்கறை உள்ளதா அதிமுகவுக்கு? அதிமுக என்ன செய்ய போகிறது?” என்ற கேள்விகளையும் அவர் எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com