#TopNews: முதலமைச்சர் பழனிசாமியின் பேட்டி முதல் கொரோனாவால் குவிந்த சடலங்கள் வரை..!
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்தது. மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதால் துளிர்விடும் நம்பிக்கை.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 3-ஆம் நிலைக்குச் செல்ல வாய்ப்பிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தகவல். வைரஸின் தன்மையைப் பொறுத்தே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்வு. சுமார் 60 ஆயிரம் பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை தகவல்.
மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவேண்டியது அவசியம். தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்.
நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 169 ஆக உயர்வு. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 860-ஐத் தாண்டியதாக சுகாதாரத்துறை தகவல்.
கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு ஒடிசாவில் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு. ஜூன் 17 வரை கல்வி நிலையங்கள் திறக்கப்படாது என முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றம்.
அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் பலி. உடல்களை வைக்க இடமில்லாததால் கனரக வாகனங்களில் கிடத்தி வைத்துள்ள அவலம்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கோடை மழை. திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி தாக்கி மூன்று பேர் பலி.