நோபல் பரிசு வென்ற முதல் இந்தியர்- ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று!

நோபல் பரிசு வென்ற முதல் இந்தியர்- ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று!
நோபல் பரிசு வென்ற முதல் இந்தியர்- ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று!

உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைக் கொடுத்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவு நாள் இன்று. ஆங்கிலத்தில் புலமை கொண்டவரான ரவீந்திராத் தாகூர் 1861 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தேவேந்திரநாத் தாகூர், சாரதா தம்பதிகளுக்கு கொல்கத்தாவில் பிறந்தார்.

இவருடன் பிறந்தவர்கள் 13 பேர். வீட்டின் கடைசிப் பிள்ளையாக பிறந்திருந்தாலும் உலகமே வியக்கும் கவிஞராக இருந்தார். இளம் பருவத்திலேயே இலக்கியம், ஓவியம், இசை , கவிதை என்று பன்முகத்திறமைக் கொண்டிருந்தார். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக 1878 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றவர் அங்குள்ள கல்விமுறையை அறிந்துகொண்டார். அதன்படி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த ’சாந்தி நிகேதன்’ பள்ளியைத் துவங்கினார். உலகின் கல்வியாளர்கள் இன்றும் இப்பள்ளியை பாராட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு படித்தவர்தான் புகழ்பெற்ற இந்திய இயக்குநர் சத்யஜித்ரே.

உலகத்தரம் வாய்ந்த ’கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பிற்காக தாகூருக்கு இலக்கியத்திற்காக நோபல் பரிசு கடந்த 1913 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அப்பரிசை வென்ற  ஆசியாவைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமை  ரவீந்திரநாத் தாகூரையேச் சேரும். நமது ஜன கண மன தேசிய கீதம் இவர் இயற்றியதே.

தனது 80 வது வயதில் உடல்நலக்குறைவால் கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தவர், கடந்த 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி மரணம் அடைந்தார். காலங்கள் கடந்தாலும் ’ஜன கண மன’ மூலம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் வாழ்ந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com