தகுதி வாய்ந்த நபர் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம்: நடிகர் பிரகாஷ்ராஜ்

தகுதி வாய்ந்த நபர் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம்: நடிகர் பிரகாஷ்ராஜ்

தகுதி வாய்ந்த நபர் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம்: நடிகர் பிரகாஷ்ராஜ்
Published on

பெங்களூரு பத்திரிகையாளர் மன்றத்தில் தான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்,  தகுதி வாய்ந்த நபர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே ஒரு இந்தியனாக தனது நிலைப்பாடு எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்பட எந்த மாநிலமாக இருந்தாலும் மிகவும் மோசமான பிரித்தாளும் தன்மை கொண்ட, வகுப்புவாத அரசியல்வாதிகளை வரும் தேர்தல்களில் வெற்றி பெற விடமாட்டோம் என்றே பெங்களூருவில் கூறியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். தன்னுடைய பேச்சை திரித்து பரப்புரை செய்து தனக்கெதிராக வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் பயம் மற்றும் விரக்தி மனநிலையையே உறுதிப்படுத்துகிறீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டும் என பிரகாஷ்ராஜ் பேசியதாக செய்திகள் வெளியாகின.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com