ஒடிசாவில் நூற்றுக்கும் அதிகமான யானைகள் ஒரே நேரத்தில் வயல்வெளியை கூட்டமாக கடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒடிசாவில் இயற்கை எழில் பொங்கும் மாயர்பன்ஜ் கிராமம் உள்ளது. இந்த கிராம பகுதியின் வயல்வெளி ஒன்றில் 100-க்கும் அதிகமான யானைகள் கூட்டம் கூட்டமாக ஒரே நேரத்தில் வயல்வெளியை கடந்து சென்றுள்ளன. இந்த அரிய காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வரிசையாக செல்லும் யானைகளின் கூட்டத்தை அங்கிருந்த மக்கள் ஆவலாக கண்டு ரசித்தனர்.