மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!

மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இன்று மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது.

க்யூ-ஆர் கோடு' வசதியுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் அதன் தொடக்க தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 61ஆவது தொடக்க தினம் கொண்டாடப்பட்ட 2011ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய வாக்காளர் தினம் தொடர்பாக, சட்ட அமைச்சக முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் தேசிய வாக்காளர் தினமாக அந்த நாள் அனுசரிக்கப்பட்டு, வாக்குரிமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் வாக்களிக்க வைக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

குறிப்பாக, புதிய வாக்காளர்களின் பதிவை ஊக்குவிப்பதுதான் தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில், இந்தியா முழுவதும் இன்று 11ஆவது தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொளி காட்சி மூலம் கலந்துகொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை வழங்க இருக்கும் குடியரசுத் தலைவர், ''ஹலோ வாக்காளர்கள்'' என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள ரேடியோவையும் தொடங்கி வைக்கிறார்.

இதே நிகழ்ச்சியில், மின்னணு வாக்காளர் அடையாள அட்டையையும் வழங்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. முதல் முறை வாக்களிப்பதற்காக மொபைல் எண்ணுடன் விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, 'இ - இபிக்' எனப்படும் மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அதில், புகைப்படம், வரிசை எண், பகுதி எண் உள்ளிட்ட விபரங்களுடன், பாதுகாப்பான 'க்யூஆர் கோடு' வசதி இருக்கும் எனவும், அதனை வலைதளம் மூலம் மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்டமாக, பிப்.,1 முதல், அனைத்து வாக்காளர்களுக்கும், 'இ - இபிக்' பதிவிறக்கிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் ஏற்படும் தாமதம், அடையாள அட்டை காணாமல் போவது, சேதமடைவது போன்ற பிரச்னைகளை இதன் மூலம் நிச்சயம் தவிர்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com