5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று இறுதி செய்கிறது தேர்தல் ஆணையம்!

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று இறுதி செய்கிறது தேர்தல் ஆணையம்!
5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று இறுதி செய்கிறது தேர்தல் ஆணையம்!

தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று இறுதி செய்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதி நிறைவடைகிறது. இதேபோல, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், ஏற்கெனவே நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து, 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்தயாரிப்புப் பணிகள், தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, சுனில் அரோரா தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நாடு முழுவதும் கொரோனா அச்சம் விலகாத நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது, பதற்றமான வாக்குச்சாவடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மேலும், தேர்தல் அட்டவணையையும் தேர்தல் ஆணையம் இன்று இறுதி செய்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com