ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: பாஜகவின் புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: பாஜகவின் புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: பாஜகவின் புகார் குறித்து விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக அளித்துள்ள புகார் குறித்து காவல்துறை தலைவர் DGP சைலேந்திரபாபு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவிடம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக சார்பில் ஜனவரி 31 ஆம் தேதி புகாரளிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், பணப்பட்டுவாடா குறித்தும் பாஜக நிர்வாகிகள் கே பி ராமலிங்கம், நாராயணன் திருப்பதி, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், அப்புகார் தொடர்பாக டிஜிபி, மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி, ஆகியோரிடம் சத்யபிரதா சாகு அறிக்கை கேட்டுள்ளார்.

அமைச்சர் நேரு மற்றும் வேட்பாளர் இளங்கோவன் ஆகியோர் அமர்ந்திருந்த ஒரு மேடையில்அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் நேரு பேசிக் கொண்டிருந்தனர். அமைச்சர் நாளை மறு தினம் செயல்வீரர்கள் கூட்டம் வைத்திருக்கிறோமே அதற்கு வரும் தலைவர்களுக்கு முறையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்டுள்ளார். அதற்கு அமைச்சர் அளித்த பதிலை பதிவு செய்யப்பட்ட ஆடியோ வீடியோ ஒன்றை வெளியிடப்பட்டது. இது குறித்த ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரதிய ஜனதா சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது

இடைத்தேர்தல் தொடர்பாக புகார்கள் வந்தால் சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை தலைவரிடமும், முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் அறிக்கைகள் கேட்கப்படும் என சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com