இந்தியா
சபரிமலை பக்தருடன் 600 கி.மீ. பாதயாத்திரை சென்ற நாய்
சபரிமலை பக்தருடன் 600 கி.மீ. பாதயாத்திரை சென்ற நாய்
சபரிமலைக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர் ஒருவருடன் சுமார் 600 கி.மீ. நடந்து சென்று நாய் ஒன்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோட்டைச் சேர்ந்த நவீன், சபரிமலைக்கு விரதமிருந்து தனது பயணத்தை கடந்த டிசம்பர் 8ம் தேதி தொடங்கினார். அவர் பாதயாத்திரை தொடங்கி இரண்டாவது நாளில் சாலையோரம் தெருநாய் ஒன்றைக் கண்டு, அதற்கு உணவளித்துள்ளார். இதையடுத்து நவீனுடன் நன்றாக ஒட்டிக்கொண்ட அந்த நாய்க்கு மாலு என நவீன் பெயரிட்டார். மேலும், சபரிமலைக்கு 15 நாட்களுக்கு மேலாக பாதயாத்திரை சென்ற நவீனுடன், மாலுவும் தனது நடைபயணத்தைத் தொடர்ந்துள்ளது. நவீன், தனது பாதயாத்திரையை முடித்த பின்னர் மாலுவைப் பிரிய மனமில்லாததால், பேருந்தில் தன்னுடனேயே மாலுவை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார்.