நாளை சூரிய கிரகணம்: திருப்பதி கோயில் 12 மணி திறக்கப்படாது - தேவஸ்தானம் அறிவிப்பு

நாளை சூரிய கிரகணம்: திருப்பதி கோயில் 12 மணி திறக்கப்படாது - தேவஸ்தானம் அறிவிப்பு
நாளை சூரிய கிரகணம்: திருப்பதி கோயில் 12 மணி திறக்கப்படாது - தேவஸ்தானம் அறிவிப்பு

நாளை சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் 12 மணி கோயில் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நாளை சூரிய கிரகணமும், நவம்பர் 8-ஆம் தேதி சந்திர கிரகணமும் நிகழ உள்ளது. அந்த நாட்களில் ஏழுமலையான் கோயிலின் கதவுகள் 12 மணி நேரம் மூடப்படும் எனவும், சர்வ தரிசனம் தவிர்த்து அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது எனவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாளை மாலை 5.11 முதல் 6.27 வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளதால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது எனவும் அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதேபோல, நவம்பர் 8ஆம் தேதி செவ்வாய் கிழமை பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.27 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்றைய தினம் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 வரை கோயிலின் கதவுகள் மூடப்படும் எனவும், கிரகணம் நடைபெறும் இரு நாட்களிலும் திருமலையில் உள்ள அன்னபிரசாத பவனில் அன்னபிரசாதம் வழங்கப்படாது எனவும், எனவே, பக்தர்கள் இதனை கவனத்தில் கொண்டு திருமலை யாத்திரைக்கு திட்டமிடுமாறும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தீபாவளிக்கு மறுநாள் நிகழும் சூரிய கிரகணம் - இந்தியாவில் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com