\
மத்திய அமைச்சர்‌ வருகையால் தாமதமான விமானம்: அமைச்சரிடம் சண்டையிட்ட பெண்

மத்திய அமைச்சர்‌ வருகையால் தாமதமான விமானம்: அமைச்சரிடம் சண்டையிட்ட பெண்

மத்திய அமைச்சர்‌ வருகையால் தாமதமான விமானம்: அமைச்சரிடம் சண்டையிட்ட பெண்
Published on

இம்பால் விமான நிலையத்தில் மத்திய அமைச்சரின் வருகையால் பயணிகள் செல்லும் விமானம் தாமதமானது. இதனால் பெண் மருத்துவர் ஒருவர் ஆவேசமாக மத்திய அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தனம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதற்காக மணிப்பூர் மாநிலத்திற்கு வருகை தந்தார். அப்போது அமைச்சர் வந்த விமானம் தலைநகர் இம்பால் விமான நிலையத்தில் தரையிறங்கியது. எனவே பாதுகாப்பு கருதி பயணிகள் செல்லும் மற்ற விமானங்கள் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த பெண் மருத்துவர் ஒருவர் அழுதுகொண்டே அமைச்சர் கண்ணன்தனமிடம் சண்டையிட்டார்.

பாட்னாவில் தனது சகோதரர் இறப்புக்கு செல்ல வேண்டிய நிலையில், அமைச்சரின் வருகையால் தனது விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். அப்போது பதில் அளித்த அவர் விமானத்தை விரைவில் புறப்பட கேட்டுக் கொள்வதாக கூறி அந்த பெண்ணை சமாதானம் செய்தார். இருப்பினும் இனி விமானம் தாமதமாக புறப்படாது என்று அமைச்சர் கடிதம் தருமாறு அந்தப் பெண் கேட்டதால் அமைச்சர் கண்ணன்தனம் அதிர்ச்சி அடைந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com