அசாம்: வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

அசாம்: வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
அசாம்: வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, பார்பேடா, துப்ரி, டாரங், காம்ரூப் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அசாம் மாநில அரசு சார்பில் 27 மாவட்டங்களில் ஆயிரத்து 687 வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பார்பேடா மாவட்டத்தில் உள்ள நிவாரண மையங்களில் மட்டும் 88 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். இந்த கனமழை வெள்ளத்தில் சுமார் 60 ஆயிரம் வீட்டு விலங்குகள் அடித்துச் செல்லப்பட்டன என்றும் 2 ஆயிரத்து 600 வீடுகள் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுஹாத்தி, ஹெய்லாகண்டி மற்றும் பாதர்கண்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com