அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு

அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு

அசாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அசாம் மாநிலத்தை புரட்டிப்போட்டுள்ளது. 31 மாவட்டங்கள் நீரில் மிதக்கின்றன. 7.11 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், நாகன் மாவட்டம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் 3.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 282 தற்காலிக முகாம்களில் 74 ஆயிரம் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியிலுள்ள மக்களை ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி தொடர்கிறது.

இதையும் படிக்கலாம்: ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com