இந்தியா
சிஏஏ எதிர்ப்பு பேரணியின்போது நொடிப்பொழுதில் ஆம்புலன்ஸுக்கு வழி: வைரல் வீடியோ!
சிஏஏ எதிர்ப்பு பேரணியின்போது நொடிப்பொழுதில் ஆம்புலன்ஸுக்கு வழி: வைரல் வீடியோ!
CAA-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியின்போது ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு நொடிப்பொழுதில் வழி ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
user
CAA-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல பகுதிகளிலும் போராட்டம் நடைபெறுகிறது. பல பகுதிகளில் CAA-க்கு ஆதரவாகவும் பேரணி நடத்தப்படுகிறது. இந்நிலையில் கேரளாவில் நடைபெற்ற CAA எதிர்ப்பு பேரணியின்போது ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு நொடிப்பொழுதில் வழி ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்ட பேரணியின்போது ஆம்புலன்ஸ் வருகிறது. ஆம்புலன்ஸ் சைரன் ஒலியைக் கேட்ட கூட்டம் நொடிப்பொழுதில் இருபுறமும் ஒதுங்கி வழி ஏற்படுத்த, வரும் வேகத்திலேயே ஆம்புலன்ஸ் கடந்து போகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.