inflation
inflation File Photo

29 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது மொத்தவிலை பணவீக்கம்

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 29 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published on

நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் 29 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்ற மார்ச் மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் 1.34 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் 14 புள்ளி 63 சதவீதமாக இருந்தது.

இதற்கு, உலோகங்கள், உணவுப்பொருட்கள், ஜவுளி, கனிமங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, பேப்பர் உள்ளிட்டவைகளின் விலை குறைந்ததே காரணம் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com