ஓட்டல் சேவைக் கட்டணத்துக்கும் வரி விதிக்கலாம்

ஓட்டல் சேவைக் கட்டணத்துக்கும் வரி விதிக்கலாம்

ஓட்டல் சேவைக் கட்டணத்துக்கும் வரி விதிக்கலாம்
Published on

சேவைக் கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்களில் கட்டணத்தை வருமானமாகக் கருதி, வரி விதிக்குமாறு வருமான வரித் துறைக்கு மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பரிந்துரை செய்துள்ளார். 

ஓட்டலில் சேவைக் கட்டணம் அளிப்பதை வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு விட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் சேவைக் கட்டணத்தை பில் தொகையில் 20 சதவிகிதம் வரை ஓட்டல்கள் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. எனவே அந்த கூடுதல் தொகைக்கு வரி விதிக்குமாறு பாஸ்வான் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் தொடர் புகார்களை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாஸ்வான் தெரிவித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com