பூகம்பம், புயலை தாங்கும் வகையில் ராமர் கோயில்!

பூகம்பம், புயலை தாங்கும் வகையில் ராமர் கோயில்!
பூகம்பம், புயலை தாங்கும் வகையில் ராமர் கோயில்!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பூகம்பம், புயல் உள்ளிட்ட எந்த விதமான இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தாலும் தாங்கும் வகையில் கட்டப்பட்டு வருவதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார். இதைத்தொடர்ந்து கோயில் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.

சிவில் கட்டுமான பணிகள், எல் அண்ட் டி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஐஐடி, மத்திய கட்டட ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் மிகப்பெரிய நிபுணர்களும் ராமர் கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

36 முதல் 40 மாதங்களில் கட்டுமானப் பணி முழுமையாக முடிவடையும் என்றும் பூகம்பம், புயல் உள்ளிட்ட எந்த விதமான இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தாலும் வலிமையாக தாங்கும் வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com