உயிருள்ள குழந்தையை இறந்ததாக அறிவித்த மருத்துவமனை : மத்திய அமைச்சர் கண்டனம்

உயிருள்ள குழந்தையை இறந்ததாக அறிவித்த மருத்துவமனை : மத்திய அமைச்சர் கண்டனம்

உயிருள்ள குழந்தையை இறந்ததாக அறிவித்த மருத்துவமனை : மத்திய அமைச்சர் கண்டனம்
Published on

டெல்லியில் உயிருடன் இருக்கும் ஆண் குழந்தையை இறந்ததாக அறிவித்த மருத்துவமனையின் செயலுக்கும் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஷாலிமார் பகுதியில் உள்ள மாக்ஸ் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதனால் அந்த குடும்பத்தினர், இறந்த குழந்தைகளை பிளாஸ்டிக் பையில் வைத்து மூடி இறுதி சடங்குகள் செய்ய எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது இறந்ததாக கூறப்பட்ட ஆண் குழந்தை ஒன்று மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு திணறியது. இதைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அப்போது அந்த குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

இதனால் கோபம் அடைந்த குடும்பத்தினர், மருத்துவமனை மீது புகார் அளித்தனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள  மாக்ஸ் மருத்துவமனை, அலட்சியமாக நடந்துக் கொண்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும், உயிருடன் உள்ள குழந்தைக்கு தேவைப்படும் மேல் சிகிச்சையை இலவசமாக செய்து தருவதாகவும் உறுதியளித்தது. டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி நட்டா இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பதற்கு டெல்லி காவல்துறையினரிடம் அறிவுறுத்தியுள்ளார்.   
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com