\
தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வேகமாக பரவும் புது வகை டெங்கு - மத்திய அரசு எச்சரிக்கை 

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வேகமாக பரவும் புது வகை டெங்கு - மத்திய அரசு எச்சரிக்கை 

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வேகமாக பரவும் புது வகை டெங்கு - மத்திய அரசு எச்சரிக்கை 
Published on: 
கடுமையாக பாதிக்கும் வகை டெங்கு காய்ச்சல் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வேகமாக பரவுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
செரோடைப் - 2 வகை டெங்கு காய்ச்சல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வேகமாக பரவுவதுடன் அதிகளவு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் இவ்வகை டெங்கு வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தொலைபேசி வழி ஆலோசனைகள் அளிப்பது, பரிசோதனை கருவிகளை ‌‌‌அதிகள‌‌‌‌‌வு கையிருப்பு வைப்பது ‌‌ உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com