`இந்திய கால்பந்து அணியை சாம்பியனாக்க இதெல்லாம் செய்றோம்!’- திட்டங்களை பகிர்ந்த மத்திய அரசு

`இந்திய கால்பந்து அணியை சாம்பியனாக்க இதெல்லாம் செய்றோம்!’- திட்டங்களை பகிர்ந்த மத்திய அரசு
`இந்திய கால்பந்து அணியை சாம்பியனாக்க இதெல்லாம் செய்றோம்!’- திட்டங்களை பகிர்ந்த மத்திய அரசு

இந்திய கால்பந்து அணி, சர்வதேச அளவில் சாதனைகள் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை நடந்து முடிந்துள்ள நிலையில் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய விளையாட்டு நலத்துறை அமைச்சகம்,2 “இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து இருக்கிறது. ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை பங்கு பெற செய்வதற்கான பொறுப்பு அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திடம் இருக்கிறது. இந்த அமைப்பிற்கு நிதி ரீதியில் மத்திய அரசு உதவி வருகிறது” என தெரிவித்தது.

மேலும், “தேசிய விளையாட்டுகள் சம்மேளனத்தின் கீழ் இந்தியாவில் கால்பந்து விளையாட்டு முன்னுரிமை பிரிவில் இருக்கிறது. இதனால் அதிகபட்ச உதவி கிடைக்கும். கூடுதலாக தேவையான உபகரணங்கள் வாங்குவது தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, இந்திய மற்றும் சர்வதேச பயிற்சியாளர்களை கொண்டு உரிய பயிற்சிகளை வழங்குவது, அறிவியல் ரீதியிலான யோசனைகளை வழங்குவது உள்ளிட்டவற்றை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவற விடாதீர்: வெற்றி வாகை சூடிய அர்ஜென்டினா.. 1500 பேருக்கு பிரியாணி வழங்கி கொண்டாடிய ஓட்டல் ஓனர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com