இந்தியாவில் நோய் பரவும் 10 இடங்களை அடையாளம் கண்டது மத்திய அரசு

இந்தியாவில் நோய் பரவும் 10 இடங்களை அடையாளம் கண்டது மத்திய அரசு
இந்தியாவில் நோய் பரவும் 10 இடங்களை அடையாளம் கண்டது மத்திய அரசு

இந்தியாவில் கொரோனாவால் சுமார் ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் வேகமாக பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம் வகித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,397-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 35-ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் நோய் வேகமாக பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. டெல்லியில் தில்ஷத் தோட்டம், நிஜாமுதீன் ஆகிய இடங்களும் மற்றும் நொய்டா, மீரட், பில்வாரா, அகமதாபாத், காசர்கோடு, பத்தனம்திட்டா, மும்பை, புனே ஆகிய இடங்களிலும் நோய் வேகமாக பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த இடம் ஒரு தொகுதியாக கணக்கிடப்படுகிறது. பல தொகுதிகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்தால், அங்கு நோய் வேகமாக பரவி வருவதாக கணக்கிடப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com