காவிரி விவகாரம்: மீண்டும் அவகாசம் கேட்கிறது மத்திய அரசு
காவிரி வழக்கில் வரைவுத்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்ற தீர்ப்பை
நடைமுறைப்படுத்த 6 வாரங்களுக்குள் புதிய திட்டத்தை வகுக்கும்படி கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உத்தரவிட்டது.
அதற்கான கெடு முடிந்தும் மத்திய அரசு வாரியத்தை அமைக்கவில்லை. இந்த வழக்கில் இதற்கு முன் நடந்த
விசாரணையின்போது, 2 வாரங்களுக்கு நதிநீர் பங்கீடு குறித்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்யுமாறு
உத்தரவிடப்பட்டிருந்தது.
காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு
வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு
வந்தது.அப்போது மத்திய அரசின் தரப்பில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டம் தயாராகி விட்டது. பிரதமர்,
அமைச்சர்கள், கர்நாடகாவில் பிரசாரம் செய்வதால் அமைச்சரவைக்கு திட்டத்தை அனுப்ப முடியவில்லை. ஆகையால்
வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

