முதல்முறையாக மாதவிடாய் ரத்தக்கறை.. சொல்ல தெரியாத தங்கை.. சந்தேகத்தில் கொலை செய்த கொடூர சகோதரன்!

முதல்முதலாய் வந்த மாதவிடாயால் ஏற்பட்ட ரத்தக்கறையைச் வேறுவிதமாகச் சந்தேகப்பட்ட சகோதரர் ஒருவர், தன் தங்கையையே தீ வைத்து கொலை செய்த கொடூரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கொலை
சிறுமி கொலைfile image

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மும்பை உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர், சுமித். இவர், தன் மனைவியுடனும், 12 வயது நிரம்பிய தன் சகோதரியுடனும் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சுமித்தின் தங்கையின் ஆடையில் மாதவிடாய்க்கான ரத்தக்கறை படிந்துள்ளது. இதைக் கண்ட சுமித், இதுகுறித்து தங்கையிடம் விவரம் கேட்டுள்ளார். ஆனால், அதுகுறித்து அந்தச் சிறுமிக்குச் சொல்லத் தெரியவில்லை. இதையடுத்து, தன் தங்கை யாருடனோ பாலியல் உறவு கொண்டதால்தான் இத்தகைய ரத்தக்கறை வந்ததாக நினைத்த சுமித், கோபத்தில் அந்த சிறுமியின் வாயில் துணியை அடைத்து, உதைத்ததுடன், உடல் முழுவதும் தீயால் சூடு வைத்துள்ளார்.

இதில் சிறுமி அலறியுள்ளார். இந்தச் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் சிறுமியைப்போய் மீட்டுள்ளனர். இதில் தீயினால் உடல் முழுவதும் பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அந்தச் சிறுமி இறந்துபோனார்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சுமித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறது. அதன்காரணமாகவே, அந்தச் சிறுமியின் ஆடையில் ரத்தக்கறை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சிறுமி அதைச் சரியாகக் கவனிக்கவில்லை.

பின்னர் அவர் அக்கம் பக்கம் உள்ளவர்களால், அங்குள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அந்தச் சிறுமி இறந்துபோனார். இது குறித்து போலீஸாருக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் கொடுத்தனர். போலீஸார் சுமித்திடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ”சிறுமிக்கு முதல் முறையாக மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஆடையில் ரத்தக்கறை ஏற்பட்டிருக்கிறது. சிறுமியும், விளையாட்டுத்தனமாக அதைக் கவனிக்காமல் இருந்திருக்கிறார்.

இதுகுறித்து அவரது அண்ணன் கேட்டபோதும், அவருக்கு விளக்கம் சொல்லத் தெரியவில்லை. இதன் காரணமாகவே, தன் தங்கை மீது சந்தேகப்பட்டு தீ வைத்திருக்கிறார். இதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்த விவகாரத்தில் சுமித்தின் மனைவிக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com