“4 தசாப்தங்களுக்கு பாஜக சக்தி வாய்ந்ததாக இருக்கும்; ராகுல் இதை உணரவில்லை”-பிரசாந்த் கிஷோர்
இந்திய அரசியல் கட்சிகளின் தேர்தல் ஆலோசகராக செயல்பட்டு வருபவர் பிரசாந்த் கிஷோர். இவர் கோவாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, “எப்படியும் அடுத்த 40 ஆண்டுகளுக்கு பாஜக இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய சக்தி வாய்ந்த கட்சியாக இருக்கும். வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி பாஜக முக்கிய பங்கு வகிக்கும். அது காங்கிரஸ் ஆட்சிக்கு ஆரம்ப நாட்களில் அமைந்த முதல் 40 ஆண்டுகளை போல இருக்கும்.
30 சதவிகிதத்திற்கும் கூடுதலான வாக்குகளை அனைத்திந்திய அளவில் ஒரு கட்சி பெறுகிறது என்றால் அதன் இருப்பு அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது. பிரதமர் மோடி இல்லை என்றாலும் பாஜக அதிகார பலம் கொண்ட கட்சியாக இருக்கும்.
ராகுல் காந்தி இதை உணர மறுக்கிறார். இதெல்லாம் வெறும் சில காலம் தான் என அவர் நம்புகிறார். ஆனால் அது நடக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய வீடியோவை அப்படியே ட்வீட் செய்துள்ளார் பாஜகவின் அஜய் செஹ்ராவத்.