மக்களவை தேர்தலில் 217 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக 217 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 97 இடங்களிலும் மற்றவை 72 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

