\
திருப்பதி கோவிலில் கடத்தப்பட்ட குழந்தை பெங்களுரூவில் மீட்பு

திருப்பதி கோவிலில் கடத்தப்பட்ட குழந்தை பெங்களுரூவில் மீட்பு

திருப்பதி கோவிலில் கடத்தப்பட்ட குழந்தை பெங்களுரூவில் மீட்பு
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடத்தப்பட்ட சிறுமி பெங்களுரூவில் மீட்கப்பட்டார்.

ஏழுமலையான் கோவில் அருகே டீக்கடையில் பணியாற்றி வரும் சுரேஷ் என்பவரின் 7 வயது மகள் நந்தினி கோவில் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது கடந்த 23-ம் தேதி காணாமல் போனார்.

இது தொடர்பான புகாரில் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் 14 குழுக்கள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலை வைத்து ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று பிற்பகல் பெங்களூரு சி.வி. ராம்நகர் பகுதியை சேர்ந்த நாராயணன் மனைவி ஷாலினியிடம் சிறுமி நந்தினி இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறுமி நந்தினியை மீட்டு திருமலைக்கு அழைத்து வந்த காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமி நந்தினியை கடத்தி சென்ற ஷாலினி குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பலைச் சேர்ந்தவரா? உடல் உறுப்புக்களை விற்கும் கும்பலைச் சேர்ந்தவரா? அல்லது வேறு எதற்காக குழந்தையை கடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com