திருப்பதியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம்

திருப்பதியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம்
திருப்பதியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம்
பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றது. காலை, மாலை என இரு வேளைகளிலும், நான்கு மாட வீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவதை காண, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிவார்கள். கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், இந்த ஆண்டும் குறைவான பக்தர்களுடன் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழக்கமாக நான்கு மாட வீதிகள் வழியாக வீதியுலா நடைபெறும் நிலையில், கட்டுப்பாடுகள் காரணமாக கோயிலின் உள்ளே கல்யாண உற்சவ மண்டபத்தில் மலையப்ப சுவாமி ஏகாந்தமாக சேவை சாதித்தார். தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று காலை 9 மணிக்கு சின்ன சேஷ வாகனத்திலும், மாலை 7 மணிக்கு அன்ன வாகனத்திலும் சுவாமி அருள்பாலிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com