உ.பி.யில் இறுதிக்கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

உ.பி.யில் இறுதிக்கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
உ.பி.யில் இறுதிக்கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் 54 தொகுதிகளுக்கு 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி, அசம்கர்க், மாவ், ஜான்பூர், காஸிபூர் சந்தவுளி, மிர்ஸாபூர், படோஹி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் 54 தொகுதிகளுக்கு 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இறுதிக்கட்ட தேர்தலுக்கான பரப்புரை சனிக்கிழமையுடன் ஓய்ந்த நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான தேர்தல் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு நடைபெறும் 54 தொகுதிகளில் 11 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், இரு தொகுதிகள் பழங்குடியின மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. 2 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சமாஜ்வாதி மற்றும் பாரதிய ஜனதா இடையே இந்த இறுதிக் கட்ட தேர்தல் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலின்போது ஆளும் பாரதிய ஜனதா அரசு சமாஜ்வாதி கட்சியின் முந்தைய ஆட்சியில் நிலவிய சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை முன் வைத்து பரப்புரை மேற்கொண்டது. சமாஜ்வாதியோ, பாரதிய ஜனதா ஆட்சியில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் பெருகிவிட்டதாக குற்றம்சாட்டி தீவிர பரப்புரை மேற்கொண்டன. குறிப்பாக லக்கிம்பூர் கேரியில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தையும் இந்த தேர்தல் பரப்புரையின்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் முன்னிறுத்தி வாக்குசேகரித்தன.

இன்று (திங்கள்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 10 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.

இதையும் படிக்க: மணிப்பூர் தேர்தல்: வாக்குப்பதிவின் போது வன்முறை - சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக பிரமுகர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com