இந்தியா
விவசாய நிலத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு
விவசாய நிலத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு
இடுக்கி மறையூரில் பிடிபட்ட 10அடி நீள மலைப்பாம்பை சின்னார் வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் வனக்கோட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது புளிக்கரை வயல் பகுதி. இங்கு வசிக்கும் ஏஞ்சல் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மறையூர் வனக்கோட்டத்தில் பாம்பு பிடிக்கும் பயிற்சி பெற்ற வனத்துறை பணியாளர் செல்வராஜுடன் வந்த வனத்துறையினர், விவசாய நிலத்தில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்துச் சென்று, சின்னார் வனப்பகுதிக்குள் விட்டனர்.