சுஷ்மாவின் ஐ.நா. உரைக்கு ராகுல் நன்றி: ஏன் தெரியுமா?

சுஷ்மாவின் ஐ.நா. உரைக்கு ராகுல் நன்றி: ஏன் தெரியுமா?
சுஷ்மாவின் ஐ.நா. உரைக்கு ராகுல் நன்றி: ஏன் தெரியுமா?

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐ.நா. சபையில் பேசிய உரைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 72வது ஆண்டு கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று உரையாற்றினார்.

அப்போது, ’இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் விடுதலை பெற்ற நாடுகள். தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் சக்தியாக இந்தியாவும், தீவிரவாதிகளின் பிறப்பிடமாக பாகிஸ்தானும் மாறியிருக்கிறது. இந்தியா ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், இஸ்ரோ போன்ற அறிவுசார்ந்த அமைப்புகளை நிறுவி வளர்த்து, மருத்துவர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கி வருகிறது. ஆனால், பாகிஸ்தானோ லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகம்மது போன்ற தீவிரவாத அமைப்புகளை வளர்த்து ஊக்குவித்து, தீவிரவாதிகளை உற்பத்தி செய்து வருகிறது’ என்று சுஷ்மா வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்.களை உருவாக்கிய காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை இறுதியில் அங்கீகாரம் செய்த சுஷ்மா ஸ்வராஜுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லை என பா.ஜ.க தலைவர்கள் கூறிவந்த நிலையில், ராகுல்காந்தி தற்போது சரியான நேரத்தில் சுஷ்மாவின் பேச்சை சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com