பெண் மருத்துவர் கொலை விவகாரம் : விரைவு நீதிமன்றம் அமைக்க தெலங்கானா முதல்வர் உத்தரவு

பெண் மருத்துவர் கொலை விவகாரம் : விரைவு நீதிமன்றம் அமைக்க தெலங்கானா முதல்வர் உத்தரவு
பெண் மருத்துவர் கொலை விவகாரம் : விரைவு நீதிமன்றம் அமைக்க தெலங்கானா முதல்வர் உத்தரவு

தெலங்கானாவில், கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, விரைவு நீதிமன்றம் அமைத்து முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

ஹைதராபாத் அருகே, அரசு கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளதோடு, வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தும் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக ஹைதராபாத்தில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. பேரணியாக சென்ற சிலர், மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

முன்னதாக பெண்ணின் வீட்டுக்கு வந்த அரசியல்வாதிகளை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட 4 பேரை, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு சைதராபாத் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com