நேபாள நாட்டில் விற்பனைக்கு வந்த ‘டெஸ்லா’ எலெக்ட்ரிக் வாகனம்

நேபாள நாட்டில் விற்பனைக்கு வந்த ‘டெஸ்லா’ எலெக்ட்ரிக் வாகனம்
நேபாள நாட்டில் விற்பனைக்கு வந்த ‘டெஸ்லா’ எலெக்ட்ரிக் வாகனம்

அமெரிக்க நிறுவனமான டெஸ்லாவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகாத நிலையில் அண்டை நாடான நேபாளத்தில் அறிமுகமாகி, விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் டெஸ்லா வாகனங்களின் அறிமுகம் இந்தியாவுக்கு முன்னதாக நேபாளத்திற்கு கிடைத்துள்ளது. 

கிட்டத்தட்ட டெஸ்லாவின் 7 எலெக்ட்ரிக் வாகனங்கள் அங்கு அறிமுகமாகி உள்ளன. அதில் X மாடல் ரேஞ்சஸ் மற்றும் மூன்று ஸ்டேண்டர்ட் ரேஞ்சஸாக வெளியாகியுள்ளன. சுமார் 5 மாடல்கள் கடந்த ஆண்டே அங்கு விற்பனைக்கு வந்துவிட்டதாகவும் தெரிகிறது. 

தெற்கு சீனாவில் இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அங்கிருந்து நேபாளத்திற்கு சப்ளை ஆகின்றன. அதில் X லாங் ரேஞ் மாடல் 3.5 கோடி நேபாள ரூபாய்க்கும், மாடல் 3 ரேஞ் 1.25 கோடி நேபாள ரூபாய்க்கும் விற்பனை ஆகிறதாம். 

அதே நேரத்தில் டெஸ்லா நிறுவனத்தின் டீலர்கள் நேபாளத்தில் யாரும் இல்லாத சூழலில், இதர ஆட்டோ மொபைல் டீலர்கள் 30 சதவிகிதம் கூடுதல் வரி செலுத்தி டெஸ்லா வாகனங்களை வாங்கி விற்பனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது அங்குள்ள மால்களில் டெஸ்லா வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதே போல மேலும் சில புதிய மாடல்களுக்கு வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணம் செலுத்திவிட்டு காத்திருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. டெஸ்லா வாகனங்களில் விலை மலிவாக உள்ள மாடல்களுக்கு நேபாளத்தில் டிமெண்ட் இருக்கிறதாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com