இந்தியா
காஷ்மீர்: மேலும் இரு தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்
காஷ்மீர்: மேலும் இரு தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் மேலும் 2 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
குல்காம் பகுதியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்க்ள் இருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் அந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளார். இதனால் அப்பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர். இம்மூவருமே பீகாரை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது.
முன்னதாக நேற்றைய தினமும் பயங்கரவாத தாக்குதலில் தொழிலாளர்கள் இறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 தினங்களில், இது மூன்றாவது தாக்குதலாக உள்ளது.

