டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: உளவுத்துறை எச்சரிக்கை
Published on

குடியரசு தின விழாவின்போது பயங்கரவாத தாக்குதலுக்கான சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருப்பதை அடுத்து, தலைநகர் டெல்லி முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ட்ரோன்கள், ராட்சத பலூன்கள், பாரா கிளைடிங் உள்ளிட்ட வான் சார்ந்த நடவடிக்கைகளுக்கு வரும் 20 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர குடியரசு தின விழா நடைபெறும் பகுதி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முகத்தை படம்பிடித்து அடையாளம் காணும் மென்பொருளுடன் கூடிய சிசிடிவிக்கள் விழா நடக்கும் பகுதியில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையுடன், டெல்லி காவல்துறை, சிறப்பு பிரிவு காவல்துறை, ஸ்வாட் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

உயரமான கட்டடங்களில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் பறந்து வரும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் வகையில் அதிநவீன துப்பாக்கிகளுடன் கட்டடங்களில் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத தாக்குதலை முறியடிக்கும் வகையில் விழா நடக்கும் பகுதியில் மட்டும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com