\
“அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாத ஊக்குவிப்பு”- பிரதமர் மோடி

“அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாத ஊக்குவிப்பு”- பிரதமர் மோடி

“அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாத ஊக்குவிப்பு”- பிரதமர் மோடி
Published on

போர்களில் தோற்றவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கார்கில் போர் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தற்போதைய கால கட்டத்தில் பயங்கரவாதத்தால் உலகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற தனது இன்னுயிரை தந்த வீரர்களின் தியாகத்தையும் வீரத்தையும் மோடி போற்றினார்.

ராணுவ வீரர்களின் நன்மைக்காக மத்திய அரசு முன்னெடுத்த பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்த பிரதமர் மோடி, பயங்கரவாதச் செயல்களை முறியடிக்க நமது படைகளை நவீனமயமாக்குவது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டார். நிகழ்வில் கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் உறவினர்களையும் பிரதமர் சந்தித்துப் பேசினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com