\
ராணுவ அதிகாரியை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்

ராணுவ அதிகாரியை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்

ராணுவ அதிகாரியை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்
Published on

மணிப்பூரில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் உயரதிகாரி உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்தனர்.

மியான்மர் நாட்டு எல்லை அருகே நடந்த இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். ராணுவ அதிகாரி குடும்பத்துடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை குறிவைத்து கண்ணிவெடி மூலம் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், அதிகாரியின் வாகனத்தை சுற்றிவளைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com