\
இப்படியும் ஒரு கொடூரம் - ஜீப்பை ஏற்றி பாதசாரி படுகொலை

இப்படியும் ஒரு கொடூரம் - ஜீப்பை ஏற்றி பாதசாரி படுகொலை

இப்படியும் ஒரு கொடூரம் - ஜீப்பை ஏற்றி பாதசாரி படுகொலை
Published on

டெல்லியில் பட்டப்பகலில் சாலையை கடந்து சென்றவர் மீது ஜீப்பை ஏற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய டெல்லியில் ஜன்பத் சாலையில் 39 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்று கொண்டிருந்தார். போக்குவரத்து குறைவாக இருந்த அந்த சாலையை ஏறக்குறையை அவர் கடந்துவிட்டு, நடைபாதையில் கால் வைக்கும் சமயத்தில், வேண்டுமென்றே வேகமாக வந்த சிவப்பு வண்ண ஜீப் ஒன்று, நடைமேடை வரை ஏறி, அந்த நபர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.



நடைமேடை வரை ஏறிய அந்த ஜீப், பின்னர் மீண்டும் சாலையில் இறங்கி, அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. பட்டப்பகலில் மக்கள் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஜீப்பை கொலைக் கருவியாக பயன்படுத்தி தப்பிச் சென்றவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.



logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com