தெலங்கானா: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

தெலங்கானா மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் மேதிபட்டினத்தில் உள்ள அன்குரா மருத்துவமனையில் சுமார் 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேல்தளத்தில் ஏற்பட்ட தீ மருத்துவமனையின் பிற தளங்களுக்கும் பரவி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் கொளுந்துவிட்டு எரிந்த தீ, சாலை வழியாக சென்றோரை பதறச் செய்தது.

மேலும் தீ விபத்து ஏற்பட்டவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீயை கட்டுப்படுத்தின.

இந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. மின்கசிவு காரணமாக மருத்துவமனையின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com