ஆந்திரா: மருந்து கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. ரூ. 5 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் சேதம்

விஜயவாடாவில் உள்ள மருந்து கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் எரிந்து சேதமடைந்தன.
Fire Accident
Fire Accidentpt desk

செய்தியாளர்: தினேஷ் குணகலா

ஆந்திர மாநிலம் விஜயவாடா பந்தர் சாலையில் மருந்து கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய தீ, கிடங்கு முழுவதும் பரவி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Fire service
Fire servicept desk

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விஜயவாடா தீயணைப்பு படையினர், ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இந்நிலையில், அங்கு சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. தீ விபத்து பற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Fire Accident
சென்னை பள்ளிக்கரணையில் வருமான வரித்துறை சோதனை - ரூ.2.85 கோடி பறிமுதல்!

இதைத் தொடர்ந்து ஏராளமான அளவிலான மருந்துப் பொருட்கள் எரிந்து வெளியான புகை காரணமாக ஏற்பட்ட நெடி அந்தப் பகுதி முழுவதும் பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com