மின்னல் தாக்கியதன் விபரீதம் - ஒரே நாளில் 10 பேர் பலி

மின்னல் தாக்கியதன் விபரீதம் - ஒரே நாளில் 10 பேர் பலி
மின்னல் தாக்கியதன் விபரீதம் - ஒரே நாளில் 10 பேர் பலி

பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் பத்து பேர் உயிரிழந்தனர்.

பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. அப்போது, சரண் மாவட்டத்தில் ஆறு பேரும் , சிவான், ஹாஜிபூர், பாங்கா மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. பீகாரில் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையின் போது வீட்டிலேயே பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிக்கலாம்: இடி, மின்னல் தாக்குதலிலிருந்து தப்பிப்பது எப்படி? - அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com