\
மகாராஷ்டிரா கட்டட விபத்து: உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா கட்டட விபத்து: உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிரா கட்டட விபத்து: உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு
Published on

மகாராஷ்டிரா கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் இன்று அதிகாலை 3.40 மணி அளவில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த பலரும் இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து 8 பேர் முதலில் சடலமாக மீட்கப்பட்டனர்.

20க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டனர். மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேலும் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். தற்போது வரை கட்டட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

இதற்கிடையே மகாராஷ்டிரா கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com