கார் விபத்தில் இறந்த சீரியல் நடிகை - தோழியின் மரண துக்கம் தாளாமல் தெலுங்கு நடிகர் விபரீத முடிவு

தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா சமீபத்தில் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது அவரது நெருங்கிய நண்பரும், தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரகாந்த்
சந்திரகாந்த்முகநூல்

தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா சமீபத்தில் கார் விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது அவரது நெருங்கிய நண்பரும், தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தெலுங்கு சீரியல் ஆன திரிநயனி என்ற சீரியலில் நடித்து வந்துள்ளார் பவித்ரா ஜெயராம். அதே சீரியலில் இவருக்கு கணவராக நடித்து வந்தவர்தான் சந்திரகாந்த். இந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பவித்ரா சாலை விபத்தில் உயிரிழந்தநிலையில், அவரோடு பயணித்த சந்திரகாந்த், பவித்ராவின் சகோதரி, கார் ஓட்டுநர் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

பவித்ரா இறந்ததற்கு பிறகு மன உளைச்சலின் நடிகர் சந்திரகாந்த் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சந்திரகாந்த் மற்றும் பவித்ரா ஒன்றாக வாழ்ந்த வீட்டிலேயே இன்று சந்திரகாந்த் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பவித்ராவின் மறைவில் இருந்த மீளமுடியாத ரசிகர்களுக்கு சந்திரகாந்தின் மரணம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பவித்ராவுக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் அவருக்கு இரண்டு குழந்தைகளும், அதேபோல் சந்திரகாந்திற்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில் சீரியல் ஒன்றாக நடித்த இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால், சில நாட்களாகவே இருவரும் ஹைதராபாத் புறநகர் பகுதியான மணிக்கொண்டா அல்காப்பூர்காலனியில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

சந்திரகாந்த்
பட்டியலின பெண்கள் குறித்து அவதூறு பேச்சு|”அந்த ஆடியோ என்னோடது இல்லை”- கார்த்திக் குமார் விளக்கம்

இந்நிலையில், சுற்றுலாவிற்கு சென்று வந்த பிறகு தங்களின் உறவை அனைவருக்கும் அறிவிக்கவிருந்த நிலையில், இந்த விபத்து அரங்கேறி, தற்போது சந்திரகாந்தும் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவர்களின் அடுத்தடுத்த மறைவு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com