பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய்.. தேர்தலுக்கு முன்பே வாக்குறுதிகளை அள்ளித் தெளித்த சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சி இப்போதே தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய், அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலே, தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் எனவும் அவர் கூறியுள்ளார். சந்திரபாபுவின் அரசியல் வாரிசாக வருவார் எனக் கருதப்படும் அவரது மகன் நாரா லோகேஷ் தற்போது மாநிலம் முழுவதும் மக்களைச் சந்திக்கும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com