இந்தியா
குண்டும் குழியும் இல்லாத ரோடு: முதல்வர் எச்சரிக்கை
குண்டும் குழியும் இல்லாத ரோடு: முதல்வர் எச்சரிக்கை
தெலங்கானா மாநிலத்தில் எந்த சாலையும் குண்டும் குழியுமாக இருக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாத இறுதிக்குள் அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும், இதனை செய்ய தவறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார். சாலை சீரமைப்புப் பணிக்காக இதுவரை இல்லாத அளவு, அதிக நிதி ஒதுக்கி இருப்பதாகக் கூறி இருக்கும் அவர், அனைத்து சாலைகளிலும் பயணித்து தானே சாலைகளின் தரத்தை சோதனையிடுவேன் என்றும் கூறியுள்ளார்.