செல்போன் பேசிக்கொண்டே லிப்டில் ஏற முயன்ற இளைஞர்; 4வது மாடியில்இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகம்!

ஹைதராபாத்தில் செல்போன் பேசிக்கொண்டே சென்று லிப்டில் தவறி விழுந்து இளைஞர் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஜேம்ஸ் லிப்டிற்கு சென்ற போது
உயிரிழந்த ஜேம்ஸ் லிப்டிற்கு சென்ற போது file image

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மயூரா நகரில் வசித்து வந்தவர் ஜேம்ஸ். இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி மேன் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் அசோக் நகரில் இருக்கும் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் ஒருவருடைய வீட்டில் கொடுக்கப்பட்ட பார்சலை வாங்குவதற்காக அங்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த பார்சலை வாங்கிக் கொண்டு, தனது செல்போனில் பேசிக் கொண்டே அடுக்கு மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து கீழே இறங்குவதற்காக லிப்ட்க்கு சென்றுள்ளார். அந்த லிப்ட் கிரில் கேட் போட்டு மூடப்பட்டிருந்தது. அதனைக் கவனிக்காமல் செல்போனில் பேசிக்கொண்டே கிரில் கேட்டை திறந்து லிப்டில் ஏற கால் வைத்துள்ளார். ஆனால் லிப்ட் தரை தளத்தில் இருந்ததுள்ளது.

உயிரிழந்த ஜேம்ஸ்
உயிரிழந்த ஜேம்ஸ்

ஜேம்ஸ் நான்காவது மாடியிலிருந்து தரைதளத்தில் இருந்த லிப்ட் மீது தவறி விழுந்துள்ளார். அதே நேரத்தில் மற்றொருவர் நான்காவது மாடிக்குச் செல்வதற்காக லிப்ட்டை இயக்கியுள்ளார். மேலே சென்ற லிப்ட் மொட்டைமாடி ஸ்லாப் மீது மோதி நின்றுள்ளது. லிப்டின் மேலே இருந்த ஜேம்ஸ் படுகாயத்துடன் உயிருக்குப் போராடியுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஜேம்ஸ் லிப்டிற்கு சென்ற போது
தூத்துக்குடி | 55,000 டன் உர மூட்டைகளுடன் தரைதட்டி நின்ற சரக்கு கப்பல்; முடங்கிப் போன இறக்குமதி பணி!

இதனையடுத்து லிப்ட் பழுதாகி அங்கேயே நின்றுள்ளது. லிப்ட் பழுதாகி நின்றது குறித்து அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மெக்கானிக்கிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த மெக்கானி லிப்டை சரிபார்த்து கொண்டிருந்த போது ரத்தம் சொட்டி கொண்டிருந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மெக்கானிக் லிப்ட் மேலே சென்று பார்த்த போது ஜேம்ஸ் உடல் நசுங்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த ஜேம்ஸ் லிப்டிற்கு சென்ற போது
‘இதுதான் தொழில்பக்தியா..?’ - சாமி கும்பிட்டுவிட்டு அம்மனிடமே திருட்டு.. அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com