\
ஆடையின்றி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் - போலீஸ் வலைவீச்சு

ஆடையின்றி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் - போலீஸ் வலைவீச்சு

ஆடையின்றி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் - போலீஸ் வலைவீச்சு
Published on

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இளைஞர் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள திருமலைகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராணுவ பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் மரேடிபள்ளியில் இருந்து நரேட்மெட் நோக்கி பைக்கில் நிர்வாணமாக வாகனம் ஓட்டிச் சென்றுள்ளார். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

பாய்ஸ் திரைப்படத்தில் சித்தார்த் காதலுக்காக நிர்வாணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் பைக் ஓட்டி செல்வார். அதேபோன்று இந்த இளைஞரும் நண்பர்கள் பேச்சை கேட்டு செய்தாரா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த இளைஞரையும் தேடி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com