\
kalyani
kalyanix page

”எங்களை காதலிக்காவிட்டால்” - லவ் டார்ச்சர் கொடுத்த இரண்டு இளைஞர்கள்.. இளம்பெண் எடுத்த விபரீதம்!

தெலங்கானா மாநிலத்தில் இளம்பெண் ஒருவருக்கு இரண்டு இளைஞர்கள் கொடுத்த லவ் டார்ச்சரால் அந்தப் பெண்ணே தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், சிந்தலகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி (19). அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரூரி சிவா மற்றும் கொம்மனபொய்னா மது. இவர்கள் இருவரும் கல்யாணியை ஒருதலையாகக் காதலித்துள்ளனர். இருவருமே கல்யாணியிடம் தங்களது காதலை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், கல்யாணி அந்த காதலை ஏற்க மறுத்துவிட்டார். எனினும், 2 பேருமே தனித்தனியாக கல்யாணிக்கு லவ் டார்ச்சர் கொடுத்துள்ளனர். ”நீ எங்கள் காதலை ஏற்காவிட்டால், உன்னுடைய போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவோம்" என மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த கல்யாணியிடம் இருவரும் மாறிமாறி போனில் லவ் டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த கல்யாணி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இத்தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் கல்யாணியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கல்யாணி இறந்துபோனார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர். இதில் கொம்மனபொய்னா மது என்ற இளைஞர் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: ’ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’- காதலருக்கு நம்பிக்கை கொடுத்த கவிஞன்..தொலைவுக்கு அப்பால் சென்ற ரவி ஷங்கர்!

kalyani
ஒருதலை காதலால் +2 மாணவி எரித்து கொலை - சாம்பலாகிப் போன போலீஸ் கனவு
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com